சீனப் பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்‍குமதி செய்வோர் மீது கடும் நடவடிக்‍கை - மத்திய அரசு எச்சரிக்‍கை

Oct 22 2019 7:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவிலிருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சீனப்பட்டாசுகளை வைத்திருந்தாலோ, விற்றாலோ தண்டனை அளிக்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி, பட்டாசுகள் வெடிக்க ஏற்கனவே உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், பட்டாசு தொழில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனப்பட்டாசுகள் இந்திய சந்தையில் விற்கப்படுவதால் கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனால் சீனப்பட்டாசுகளை தடை செய்ய வேண்டுமெனவும், பட்டாசு தொழில் உரிமையாளர்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனப்பட்டாசுகளை வைத்திருப்பதும், பதுக்கி வைப்பதும் விற்பனை செய்வதும் குற்றச்செயலாக கருதப்பட்டு சுங்கத்துறை சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனப்பட்டாசுகளில் சிவப்பு ஈயம், காப்பர் ஆக்சைடு, லித்தியம் போன்ற நச்சுப்பொருட்கள் இருப்பதால், அவை சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00