காஷ்மீர் பிரச்னைக்‍கு இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைதான் தீர்வு - பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுதான் முட்டுக்‍கட்டையாக இருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

Oct 22 2019 9:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிம்லா ஒப்பந்த அடிப்படையில், இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம், காஷ்மீர் பிரச்னைக்‍குத் தீர்வு காண வேண்டும் எனவும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்‍கைதான் சமரசத் தீர்வுக்‍கு பெரும் முட்டுக்‍கட்டையாக இருப்பதாகவும், அமெரிக்‍கா குற்றம்சாட்டியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்‍கான இந்திய அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை, இந்திய அரசு ரத்து செய்ததையடுத்து, இந்தியாவுக்‍கு எதிரான நடவடிக்‍கைகளில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது. இருநாடுகளும் பதற்றத்தைத் தணித்து, சமரசப் பேச்சுவார்த்தை மூலம், பிரச்னைக்‍குத் தீர்வு காண வேண்டும் என அமெரிக்‍க அதிபர் Donald Trump, ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், 1972-ம் ஆண்டின் சிம்லா ஒப்பந்த அடிப்படையில், இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களிடையேயான பிரச்னைக்‍கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என, அமெரிக்‍க அரசின் வெளியுறவு உதவி அமைச்சர் Alice G. Wells வலியுறுத்தியுள்ளார். அமெரிக்‍க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக்‍ குழுவிடம் இதனை அவர் தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகளில் மனித உரிமைகள் நிலை குறித்து அமெரிக்‍க நாடாளுமன்றக்‍ குழு ஆய்வுக்‍ கூட்டம் நடத்தும் நிலையில், அமெரிக்‍க வெளியுறவு அமைச்சகம் சார்பில், அளிக்‍கப்பட்டுள்ள அறிக்‍கையில், இந்தக்‍ கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் எல்லைதாண்டிய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்‍கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதுதான், இருநாடுகளிடையிலான பேச்சுவார்த்தைக்‍கு தடையாகவும் முட்டுக்‍கட்டையாகவும் இருப்பதாகவும் Alice G. Wells குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00