நிலவில் விக்‍ரம் லேண்டரை தரையிறக்க திட்டமிட்ட பகுதியில் எடுக்‍கப்பட்ட புகைப்படங்கள் - லேண்டர் தொடர்பான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என நாசா தகவல்

Oct 23 2019 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிலவை சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படத்தில், சந்திராயன்-2 விண்கலத்தின் லேண்டர் கருவியான விக்ரம் தொடர்பான எவ்வித ஆதாரங்களும் கிடைக்‍கவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் கருவியான விக்‍ரம், கடந்த ஆகஸ்டு 7ம் தேதி, நிலவின் குறிப்பிட்ட இடத்தில் தடம் பதிக்‍க வேண்டிய இறுதி நேரத்தில், தகவல் தொடர்பை இழந்தது.

ஹாட் லேண்டிங் தொழில்நுட்ப முறையில் நிலவில் தரையிறங்கி உள்ள விக்‍ரம் லேண்டர், அசைவற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்‍கப்பட்டது. அதனுடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியாவுக்கு துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் களமிறங்கியது. இருந்தபோதிலும், விக்‍ரம் லேண்டருடன் எவ்வித தொடர்பும் மேற்கொள்ள முடியவில்லை.

மேலும், சந்திராயன் 2ன் ஆர்பிட்டர், நாசாவின் ஆர்பிட்டர் ஆகியவை ஏற்கனவே எடுத்த புகைப்படங்களில் விக்‍ரம் லேண்டர் தொடர்பான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் லேண்டரை நிலவில் தரையிறக்க திட்டமிட்ட பகுதியில் நாசாவின் ஆர்பிட்டர் மீண்டும் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அதிலும் லேண்டர் தொடர்பான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00