கல்கி ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தது வருமான வரித்துறை - சாமியாரிடம் விசாரணை நடத்த அமலாக்‍கத்துறை திட்டம்

Oct 23 2019 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்கி ஆசிரமங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான ஆவணங்களை அமலாக்‍கத்துறையிடம், வருமானவரித்துறை சமர்ப்பித்துள்ளது. ஆவணங்களின் அடிப்படையில் கல்கி சாமியாரிடம் விசாரணை நடத்த அமலாக்‍கத்துறை திட்டமிட்டுள்ளது.

கல்கி ஆசிரமங்களில் அண்மையில் நடைபெற்ற வருமானவரி சோதனையில், 800 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமாக 4 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதும், வெளிநாடுகளில், கல்கி ஆசிரமம், 100 கோடி ரூபாய் அளவுக்‍கு முதலீடு செய்திருப்பதும், வருமான வரிச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆசிரமங்களில் இருந்து 90 கிலோ தங்க நகைகள், 44 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதில் பிரிட்டன் பவுண்ட் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளும் சிக்‍கின. இதையடுத்து, அனுமதியின்றி வெளிநாட்டு பணத்தை பதுக்‍கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், கல்கி சாமியாரிடம் விசாரணை நடத்த அமலாக்‍கத்துறை முடிவு செய்தது.

இந்நிலையில், கல்கி ஆசிரமங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருமானவரித்துறை, அமலாக்‍கத்துறையிடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் கல்கி சாமியாரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00