மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக? - சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன

Oct 24 2019 6:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஹரியானாவின் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா ஓர் அணியாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மற்றொரு அணியாகவும், கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் 60 புள்ளி 83 சதவீத வாக்குகள் பதிவாகின. ஹரியானாவில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு நடைபெற்ற தேர்தலில் 68 புள்ளி 47 சதவீத வாக்குகள் பதிவாகின. கருத்து கணிப்பு முடிவுளில் பா.ஜ.க.வுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என கூறப்படும் நிலையில், இவ்விரு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் துவங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வாக்கு எண்ணும் மையங்களில் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00