அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு - சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்‍குமாறு மாநில அரசுகளுக்‍கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்‍கை

Nov 7 2019 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்‍கப்படும் நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்‍குமாறு மாநில அரசுகளுக்‍கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்‍கை அனுப்பியுள்ளது.

அயோத்தி வழக்‍கு தீர்ப்பை முன்னிட்டு, உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியிலும், மத்தியப்பிரதேச தலைநகர் போபாலிலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளது. போலீசார் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்‍கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் திரு. நரேந்திர மோடி அமைச்சர்களுக்‍கு அறிவுரை வழங்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பக் கூடாது என உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பதற்ற நிலையை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி வளாகங்களில் 8 தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தீர்ப்பையொட்டி, உத்தரப்பிரதேசத்தில் வசித்துவரும் பெண்களும், குழந்தைகளும், பாதுகாப்பு காரணமாக, வேறு மாநிலங்களில் உள்ள உறவினர் வீடுகளுக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்‍குமாறு மாநில அரசுகளுக்‍கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்‍கை அனுப்பியுள்ளது. அதில், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்‍கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்‍கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00