வீட்டிற்காக ரூ. 15 கோடி அரசு நிதி ஒதுக்‍கீடு செய்ததாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

Nov 7 2019 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திர முதலமைச்சர் திரு. ஜெகன்மோகன் ரெட்டி, அவரது வீட்டை புதுப்பிக்‍க, அரசு நிதியிலிருந்து 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான திரு. சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள முதலமைச்சர் திரு. ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டுக்கு சாலை போடவும், ஹெலிபேட் அமைக்‍கவும், மின்சாரப் பணிகள் மேற்கொள்ளவும், கதவு, ஜன்னல்கள் பொருத்தவும், பொதுமக்களை சந்திப்பதற்காக பெரிய கூடம் அமைக்‍கவும், அரசு நிதியில் இருந்து 15 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும், ரோம் நகரம் பற்றி எரிந்த போது, ஃபிடில் வாசித்த நீரோ மன்னனைப்போல, ஆந்திர மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நேரத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன்ரெட்டி, தனது அரண்மனையில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருப்பதாகவும், சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00