நிதி நெருக்கடியால், ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல் நிர்வாகம் - 4 நாட்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம்

Nov 7 2019 9:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிஎஸ்என்எல் ஊழியர்கள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வு பெற, விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதால், கடந்த பிப்ரவரி மாதம் முதலே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் திணறி வருகிறது. இதனால், ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிர்வாகம் அறிவித்தது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்த விருப்ப ஓய்வு திட்டத்துக்கு, 50 வயது மற்றும் அதற்கும் அதிகமான வயதுடைய ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பணியில் இருந்த ஆண்டுகளை கணக்கிட்டு, ஆண்டுக்கு 35 நாட்கள் ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும், ஓய்வு பெறும் வயதுவரை 25 நாட்களுக்கான ஊதியம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் கடந்த 3-ம் தேதி தொடங்கப்பட்டது. இதில், டிசம்பர் 4-ம் தேதி வரை ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், இதுவரை பிஎஸ்என்எல் ஊழியர்கள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00