கர்தார்பூர் வரும் யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் கொண்டுவருவது குறித்து பாகிஸ்தானில் இருந்து குழப்பமான தகவல்கள் வருவதாக இந்தியா குற்றச்சாட்டு

Nov 7 2019 8:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்தார்பூர் வரும் யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் கொண்டு வருவது குறித்து, பாகிஸ்தான் குழப்பமான தகவல்களை அளித்து வருவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

சீக்கிய மத நிறுவனர் குருநானக்கின், 550-வது பிறந்த நாள், வரும் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கர்தார்பூர் சாஹிப்புக்கு செல்ல, இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையா, இல்லையா என்பதில் இரு ‍வேறு கருத்துக்கள் பரவி வருவதால், குழப்பமான சூழ்நி‌லை நிலவி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் திரு. ரவீஸ் குமார், கர்தார்பூர் ஒப்பந்தம் தொடர்பாக, பாகிஸ்தானில் இருந்து குழப்பமான தகவல்கள் வருகின்றன என்றும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் மற்ற அமைப்புகள் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும் தெரிவித்தார்.

கர்தார்பூர் ஒப்பந்தப்படி பாஸ்போர்ட் தேவை என்றுக் குறிப்பிட்ட அவர், கர்தார்பூர் ஒப்பந்தத்தில், எந்த மாற்றத்தையும் தன்னிச்சையாக செய்ய முடியாது என்றும், இரு தரப்பும் ஒப்புக் கொண்டால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும் என்றும் திரு. ரவீஸ் குமார் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00