வங்கி மோசடிக்காரர்களின் நண்பராக மாறிய மோடி : காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு

Nov 8 2019 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கி மோசடியில் ஈடுபடுவோரின் நண்பராக பிரதமர் திரு. நரேந்திர மோடி இருப்பதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திரு. சஞ்சய் தத் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில், மத்திய அரசைக்‍ கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு. சஞ்சய் தத், மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால், தொழில்துறை மற்றும் பங்குசந்தை சரிவை சந்தித்துள்ளதாகவும், இந்திய பொருளாதாரம் "எக்கனாமிக்ஸ் என்பது தற்போது மோடினாமிக்ஸ்" என மாறிவிட்டதாகவும் அடுக்‍கடுக்‍கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும், வங்கி மோசடி முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நண்பராக இருப்பதாகவும், அம்பானி, அதானி உள்ளிட்டோர்களுக்‍கான ஆட்சியாக மோடி அரசு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தமிகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில், அதிமுக - பாஜக கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என தெரிவித்த திரு. சஞ்சய் தத், R.S.S. அமைப்பை தடை செய்ய வேண்டும் எனக்‍ கூறிய சர்தார் வல்லபாய் பட்டேலை வைத்து அரசியல் செய்ததைப் போல, தற்போது திருவள்ளுவரை வைத்து பாஜக அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00