சோனியா குடும்பத்திற்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்
Nov 8 2019 7:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு பாதுகாப்பு அளித்து வரும் சிறப்பு பாதுகாப்பு குழுவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டில், குடியரசுத் தலைவர், பிரதமர், பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளவர்கள் உள்ளிட்டோருக்கு எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு குழு மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கான சிறப்பு பாதுகாப்பு குழுவை திரும்பப் பெற, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் வாயிலாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.