பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் பதுக்கப்பட்டுவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சக செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் பேட்டி

Nov 8 2019 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் பதுக்கப்பட்டுவிட்டதாக, முன்னாள் நிதி அமைச்சக செயலாளர் திரு.சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சக செயலாளராக பணியாற்றிய திரு.சுபாஷ் சந்திர கார்க், கடந்த ஜூலை மாதம் மின்சாரத்துறைக்கு மாற்றப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அவர், பதவியை ராஜினாமா செய்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதுதொடர்பாக டெல்லியில் திரு.சுபாஷ் சந்திர கார்க் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அதிக அளவில் பதுக்கப்பட்டு விட்டதாகவும், அதனால்தான் இந்திய பொருளாதாரத்தில் பண பரிமாற்றத்துக்கான செயல்பாட்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பதுக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியே கொண்டுவர, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டு, ஏ.டி.எம்களில் மற்ற ரூபாய் நோட்டுக்களை வழங்கலாம் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00