முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னவிஸ் - மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்‍க இன்றே கடைசி நாள் என்பதால் நொடிக்‍கு நொடி பரபரப்பு

Nov 8 2019 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆ‌ட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் பதவியை திரு. தேவேந்திர பட்னவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில், 161 தொகுதிகளில் வெற்றி பெற்ற, பா.ஜ.க., - சிவசேனா கூட்டணி இடையே அதிகாரப் போட்டி நிலவியதால், புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகள் தரும் வரை பா.ஜ.க.,வுக்கு ஆதரவளிக்க முடியாது என்று சிவசேனா கட்சி திட்டவட்டமாக தெரிவி‌த்து விட்டது. இன்று நள்ளிரவுடன் மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

இந்நி‌லையில், மும்பையில், முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஸ், மாநில அமைச்சர்களுடன், ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அவர் வழங்கினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. தேவேந்திர பட்னவிஸ், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும், முதலமைச்சராக பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பெரும்பான்மை இல்லாததால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தததாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, சிவசேனா கட்சிக்கு ஆதரவளிக்கக்கோரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. சரத் பவாரை, அக்கட்சி மூத்த தலைவர் திரு. சஞ்சய் ராவத் சந்தித்து ‍பேசினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00