சோனியா, ராகுல், பிரியங்காவின் சிறப்பு பாதுகாப்பு வாபஸ் : பாதுகாப்புப் படையினருக்‍கு ராகுல்காந்தி மனமார்ந்த நன்றி

Nov 9 2019 10:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
தன்னையும் தனது குடும்பத்தினரையும் பாதுகாக்க, அயராது உழைத்த சிறப்பு பாதுகாப்பு படை சகோதர, சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு பாதுகாப்பு அளித்து வரும் சிறப்பு பாதுகாப்பு குழுவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் ‍சேர்ந்த வீரர்களை கொண்டு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பாதுகாப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திரு. ராகுல்காந்தி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தன்னையும் தனது குடும்பத்தினரையும் பாதுகாக்க, அயராது உழைத்த சிறப்பு பாதுகாப்புப் படை சகோதர, சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். பல ஆண்டுகாலம் தங்களுடன் பயணித்ததில், அர்ப்பணிப்பு உணர்வை தெரிந்துகொண்டதாகவும், தங்களுடனான பயணம் மகிழ்ச்சியாகவும், உணர்வு பூர்வமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையை நல்வாழ்த்துக்கள் என திரு. ராகுல்காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00