அயோத்தி நில பிரச்னை தொடர்பான வழக்‍கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு : நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு - மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரம்

Nov 9 2019 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி வழக்‍கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்‍கில் சர்ச்சைக்‍குரிய இடத்தில் ராமர்கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லியில் போலீசார் குவிக்‍கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் ஒற்றுமைக்‍கும் அமைதிக்‍கும் பாதகம் விளைவிக்‍கும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என எச்சரிக்‍கப்பட்டுள்ளது.

மும்பையில் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று காலை 11 மணிமுதல் 24 மணிநேரத்திற்கு அமலில் இருக்‍கும் எனத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. கோயில்கள், ரயில்​நிலையங்கள் உட்பட மக்‍கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த இந்து ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்‍கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்‍கப்படுகின்றன. பாதுகாப்புக்‍கு ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00