சட்டம் மற்றும் வரலாறு அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது - தலைமை நீதிபதி ரன்ஞன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கருத்து

Nov 9 2019 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தியில், சர்ச்சைக்‍குரிய நிலத்தை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் இன்று ஒருமித்த தீர்ப்பளித்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் சர்ச்சைக்‍குரிய 2 புள்ளி ஏழு ஏழு ஏக்‍கர் நிலத்தை, சன்னி வக்‍ஃப் வாரியம், நிர்மோரி அகோரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகள் உரிமை கோரின. நிலத்தை 3 அமைப்புகளும் சமமாக பகிர்ந்துகொள்ள, 2010-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி, அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், 14 மேல்முறையீட்டு மனுக்‍கள் தாக்‍கல் செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்‍கை மத்தியஸ்தம் செய்து தீர்த்து வைக்‍க, உச்சநீதிமன்றம், குழு அமைத்தது. மத்தியஸ்தக்‍ குழுவால் விவகாரத்தை தீர்த்து வைக்‍க முடியாததால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. கடந்த ஆகஸ்டு 6ம் தேதி முதல் அக்‍டோபர் 16ம் தேதி 40 நாட்களுக்‍கு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், இன்று அயோத்தி வழக்‍கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நசீர், அசோக்‍ பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று ஒருமித்த தீர்ப்பு வழங்கியது.

ஷியா வக்ஃப் வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நிலத்திற்கு, நிர்மோகி அகோரா அமைப்பும் உரிமை கோர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். அயோத்தி சர்ச்சைக்‍குரிய நிலத்தை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்‍க உத்தரவிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00