சர்ச்சைக்‍குரிய 2.77 ஏக்‍கர் நிலத்தை இந்து அமைப்புகளிடமே ஒப்படைக்‍க வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Nov 9 2019 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி நில விவகாரத்தில், சட்டம் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுவதாக தெரிவித்த உச்சநீதிமன்றம், 2.77 ஏக்‍கர் நிலத்தை, அலகாபாத் உயர்நீதிமன்றம், 3 அமைப்புகளுக்‍கும் சரிசமமாக பிரித்துக் ‍கொடுக்‍க உத்தரவிட்டது தவறு எனக்‍ கூறியது.

அயோத்தி வழக்‍கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், தொல்லியல் துறை மற்றும் ஆவண ஆதாரங்களை கருத்தில் கொண்டதாக தெரிவித்தது. வழிபாட்டு சட்டப்படி அனைத்து மத மக்‍களின் உணர்வுகளும் பாதுகாக்‍கப்பட வேண்டியது அவசியம் என்றும், நீதிமன்றம், சமநிலையை கடைபிடிக்‍க வேண்டியுள்ளது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்‍கப்பட்டது உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய செயல் என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையதுதான் என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்‍கவில்லை என்றும் கூறினார்.

சர்ச்சைக்‍குரியதாகக் கருதப்படும் இடத்தில், ராமர் பிறந்ததாக இந்துக்‍கள் நம்புவதாகவும், சம்பந்தப்பட்ட இடத்தில், இந்துக்‍களும், முஸ்லிம்களும் வழிபாடு நடத்தியதாக சாட்சியங்கள் உணர்த்துவதாகவும் நீதிபதிகள் தெவித்தனர். வெற்று நிலத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்றும், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கனவே ஒரு அமைப்பு இருந்ததாகவும், ஆனால் அது இஸ்லாமிய அமைப்பு அல்ல என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00