அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்டலாம் : அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு

Nov 9 2019 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர்கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. சன்னி வக்ஃபு வாரியத்திற்கு, தனியாக 5 ஏக்கர் நிலத்தை அயோத்தியில் வழங்க வேண்டும் என்றும், கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு என்றும், தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அயோத்தியில், சர்ச்சைக்குரிய இரண்டு புள்ளி ஏழு ஏழு ஏக்கர் நிலத்தை, நிர்மோஹி அக்காரா, ராம் லல்லா, சன்னி வக்ஃபு வாரியம் ஆகியவை உரிமை கொண்டாடின. இதை சரிபாதியாக பிரித்துக் கொள்ள கடந்த 2010-ம் ஆண்டு அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களை, தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் திரு. எஸ்.ஏ. பாப்டே, திரு. டி.ஒய். சந்திரசூட், திரு. அசோக் பூஷண், திரு. அப்துல் நஸீர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதிமுதல், தொடர்ந்து 40 நாட்கள் வரை விசாரணை நடத்தி முடித்தது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய், வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுவதை அடுத்து, அயோத்தி வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை 10.30 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது.

இருதரப்பிலும் வழிபாடு நடத்துபவர்களின் நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் - அதை நடுநிலையுடன் நீதிமன்றம் அணுகும் - சர்ச்சைக்குரிய 2 புள்ளி ஏழு ஏழு ஏக்கர் நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று ஷியா வக்ஃபு வாரியம் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையை முழுமையாக நிராகரிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள் அந்த அறிக்கையின் அடிப்படையில், பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை - அதை சமயம், சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் பாபர் மசூதியின் கீழ் பகுதியில் இருக்கும் கட்டடம், இஸ்லாமியர்களின் கட்டடம் அல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர் - கோவில் இடிக்கப்பட்டுதான் கட்டுப்பட்டதா என்றும் கூறவில்லை என தெரிவித்த நீதிபதிகள், அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது எனத் தெரிவித்தனர் - சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பளித்தனர்.

அயோத்தியா சட்டம் 1999-ன் கீழ், அடுத்த மூன்று மாத காலத்திற்குள் புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் - இதற்காக, தனியாக அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி, கோவிலைக் கட்ட வேண்டும் - கோவிலின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி ஆகியவற்றை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அயோத்தியில், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை, அவர்கள் கேட்கும் இடத்தில் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00