மகாராஷ்டிர அரசியலில் அரங்கேறும் அடுத்தடுத்த திருப்பங்கள் - ஆட்சியமைக்‍க தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்‍கரே

Nov 11 2019 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்‍க சிவசேனா மும்முரம் காட்டிவரும் நிலையில், அக்‍கட்சி தலைவர் திரு. உத்தவ் தாக்‍ரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத் பவாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதாவுடனான கூட்டணியிலிருந்து சிவசேனா முழுமையாக விலகினால் மட்டுமே, மஹாராஷ்ட்ராவில் அக்‍கட்சி ஆட்சியமைக்‍க, ஆதரவு தருவது குறித்து ஆலோசிக்‍க முடியும் என தேசியவாத காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், அக்‍கட்சியை சேர்ந்த எம்.பி. அர்விந்த சவாந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதனால், பா.ஜ.க., சிவசேனா கூட்டணி முடிவுக்‍கு வந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்த சூழலில், சிவசேனாவுக்‍கு ஆதரவு தருவது குறித்து காங்கிரசுடன் ஆலோசனை நடத்தியப்பிறகே முடிவுசெய்யப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத் பவார் இன்று காலை கூறினார். இதையடுத்து, டெல்லியில் உள்ள திருமதி. சோனியா காந்தி இல்லத்தில், காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், சிவசேனாவுக்‍கு ஆதரவு தருவது குறித்து மாலை 4 ​மணிக்‍கு, மஹாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்‍கப்படும் என தெரிவிக்‍கப்பட்டது.

இதனிடையே, மஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்‍க, சிவசேனாவுக்‍கு ஆளுநர் கொடுத்த கால அவகாசம் மாலை 7 மணிக்‍கு முடிவுக்‍கு வருகிறது. இந்ந நிலையில், மஹாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பது குறித்து, சிவசேனா தலைவர் திரு. உத்தவ் தாக்‍ரே, முதல்முறையாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத் பவாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00