கல்விக்‍ கட்டண உயர்வுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் - மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறல் - தள்ளுமுள்ளு

Nov 11 2019 7:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் போராடும் மாணவர்களை ஒடுக்க பல்கலைக்‍கழக வளாகத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்‍கப்பட்டனர். இதனால் மாணவர்களுக்கும் போலீசுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு எற்பட்டது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டண உயர்வு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டு உத்தரவுகளை கண்டித்து, கடந்த 15-நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காததால், பல்கலைக்கழக வளாகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்கள் தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் பல்கலைக்‍கழக வளாகத்தில் துணை ராணுவப்படையினர் குவிக்‍கப்பட்டுள்ளனர். மாணவர்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் போர்க்‍களம் போன்று காட்சியளிக்‍கிறது.

இதனிடையே ஜவஹர்லால் நேரு பல்கலைக்‍கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக துணை குடியரசுத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00