அயோத்தி வழக்கின் தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி : வெளிநாட்டு பத்திரிகைகள் செய்தி

Nov 11 2019 7:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என வெளிநாட்டு பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

அயோத்தியில் சர்ச்சைக்‍குரிய நிலத்தை இந்து அமைப்புகளிடம் வழங்கவும், இஸ்லாமியர்களுக்‍கு, அயோத்தியிலேயே வேறு இடத்தில் 5 ஏக்‍கர் நிலம் வழங்கவும் உச்சநீதிமன்றம் கடந்த சனிக்‍கிழமை உத்தரவிட்டது. தீர்ப்பு குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பல நூற்றாண்டுகளாக நீடித்த அயோத்தி விவகாரத்தில், இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் இந்தியாவை மறுசீரமைப்பதில் பிரதமர்​மோடிக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், அயோத்தி தீர்ப்பின் மூலம், பா.ஜ.க.-வின் முக்கிய லட்சியம் நிறைவேறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கார்டியன் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடிக்‍கு, அயோத்தி தீர்ப்பு மூலம் மீண்டும் மகத்தான வெற்றி கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாளிதழ்களில் மட்டும், அயோத்தி தீர்ப்பு குறித்து எதிர்மறையான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00