மகாராஷ்டிர ஆளுநருடன் சிவசேனா தலைவர்கள் சந்திப்பு - ஆட்சியமைக்க மேலும் 48 மணி நேரம் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கை நிராகரிப்பு

Nov 11 2019 9:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில், மகாராஷ்டிர ஆளுநரை சந்தித்த சிவசேனா தலைவர்கள், ஆட்சியமைக்க மேலும் 48 மணி நேரம் அவகாசம் கேட்டனர். ஆனால் கால அவகாசம் அளிக்க ஆளுநர் மறுத்துவிட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என்பதில் சிவசேனா கட்சி உறுதியாக இருந்ததால், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை முறித்துக்கொண்டதுடன், ஆட்சியமைக்க போவதில்லை என ஆளுநரிடம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனா ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, சிவசேனா கட்சி ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரியது. ஆனால், பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டால்தான், ஆதரவளிக்க முடியுமென தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்தது. இதனைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் சிவசேனா கட்சி தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். அப்போது, கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், ஆட்சியமைக்க மேலும் 48 மணிநேரம் அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஆனால், ஆளுநர் பகத்சிங் கோசியாரி சிவசேனா கட்சி ஆட்சியமைக்க கால அவகாசம் அளிக்க மறுத்து விட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00