தேசிய குற்றப்பதிவு ஆவணத்தில் தேசவிரோத குற்றம், புதிதாக சேர்ப்பு - தெளிவான வரையறை இல்லை என விமர்சனம்

Nov 12 2019 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2017-ம் ஆண்டுக்கான குற்றப்பதிவு ஆவணத்தில், இடம் பெற்றுள்ள தேச விரோத குற்றம் புரிந்தவர்கள் என்ற புதிய பிரிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு கிளர்ச்சியாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் ஆகியோர் இந்த பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நிகழ்ந்த குற்றங்களை, அதன் தன்மைக்‍கேற்ப, பிரித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2017-ம் ஆண்டு நிகழ்ந்த குற்றங்களுக்கான குற்றப்பதிவு ஆவணத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. இதில், தேச விரோத குற்றங்கள் புரிந்தவர்கள் என்ற பிரிவு புதிதாக இடம்பெற்றுள்ளது. இதில், வடகிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் மீது பதியப்பட்ட குற்றங்கள் என ஒரு பிரிவும், நக்சல்கள் அல்லது இடதுசாரி தீவிரவாதிகள் மீது பதியப்பட்ட குற்றங்கள் என ஒரு பிரிவும் இடம்பெற்றுள்ளது. இதில் வடகிழக்கு கிளர்ச்சியாளர்கள் மீது பதியப்பட்ட 421 வழக்குகளில், 54 வழக்குகள் திருட்டு, கொலை போன்ற வழக்கமான குற்றங்களே. 75 சதவீதம் வழக்குகள், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வர வேண்டிய வழக்குகள். இதேபோல, நக்சலைட்டுகள் மீது பதியப்பட்ட 652 வழக்குகளில், 60 சதவீதம் வழக்குகள், வழக்கமான குற்றங்களே. மேலும், தீவிரவாதிகளால் இழைக்கப்பட்ட குற்றங்களில் 62 சதவீதம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வர வேண்டியவை. இந்த வகையில் இந்த அறிக்கையில், வரையறுக்கப்பட்டுள்ள தேச விரோத குற்றங்கள் என்ற பிரிவுக்கான தெளிவான வரையறைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது பல்வேறு தரப்பினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00