சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவிற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு --- ரஃபேல் விமான ஒப்பந்தம், ராகுல் மீதான அவதூறு வழக்குகளிலும் தீர்ப்பு வெளியாகிறது

Nov 14 2019 9:10AM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதால், சபரிமலை அமைந்திருக்கும் பத்தினம்திட்டா மாவட்டத்தில், போலீசார், பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளனர். ரஃபேல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதும், பாதுகாவலரே திருடன் என, பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கிலும், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உட்பட, 48 மனுக்கள் மீது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய விமானப்படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் ஊழல் நடக்கவில்லை என தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்தும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடியை, 'காவலாளி திருடன்' எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி மீது, பாஜக எம்.பி. மீனாட்சி லோகி, அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும், விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மறுசீராய்வு மனு மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00