தெலங்கானாவில் தீவிரமடையும் போக்‍குவரத்து தொழிலாளர் போராட்டம் : போக்குவரத்து பணிமனைகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு

Nov 16 2019 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று பணிமனைகள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்ததை அடுத்து, ஐதராபாத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து பணிமனைகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா அரசு போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊதிய சீரமைப்பு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த மாதம் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 48 ஆயிரம் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று ஊழியர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இப்போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், இன்றைய தினம் பணிமனைகள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெலங்கானா அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதனையடுத்து, ஐதராபாத்தில் உள்ள அனைத்து பணிமனைகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00