உள்ளாட்சித் தேர்தலை உறுதியளித்தபடி நடத்தவில்லை என தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

Nov 17 2019 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்ளாட்சித் தேர்தலை உறுதியளித்தபடி நடத்தாத தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த உத்தரவிடக் கோரி ஜெயசுகின் என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்‍கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்‍கு வந்தது. அப்போது, அக்‍டோபர் 31ம் தேதி வரை தேர்தலை நடத்த முடியாது என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்‍கப்பட்டது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பினை வெளியிட மேலும் 4 வார காலம் அவகாசம் கோரி, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாத இறுதியில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தபடி அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடாத மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக வழக்‍கறிஞர் ஜெயசுகின், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்‍க உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00