டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்‍கு கண்டனம் - போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் கைது

Nov 20 2019 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கல்விக் ‍கட்டணம், விடுதிக் கட்டணம் உயர்த்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகளை எதிர்த்து, மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம், நாடாளுமன்றத்தை நோக்‍கி பேரணியாக சென்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், பார்வையற்ற மாணவர்கள் மீதும் போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாங்கள் பார்வையற்றவர்கள் எனக்கூறி, கண்ணாடியை கழற்றி காண்பித்த போதும், பார்வையில்லாமல் எதற்கு போராட வருகிறீர்கள் எனக்கூறி, போலீசார் கடுமையாக தாக்கியதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைக் கண்டித்து, டெல்லி போலீஸ் தலைமையகம் அருகில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00