கூடங்குளம் அணு உலையில் கூடுதலாக 4 அலகுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரும் வழக்கு - 2 வாரங்களில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அணுசக்தி கழகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Nov 20 2019 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கூடங்குளம் அணு உலையில் கூடுதலாக 4 அலகுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் கூடுதல் ஆவணங்களை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யுமாறு அணுசக்தி கழகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலையில் கூடுதலாக 4 அலகுகள் செயல்பட மத்திய மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனை ரத்து செய்யக்கோரி, சுந்தரராஜன் என்பவர் தொடர்ந்த மனுவை, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2016-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுந்தர்ராஜன் தொடர்ந்த வழக்கு, அப்துல் நசீர் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யுமாறு அணுசக்தி கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கினை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.