அயோத்தி தீர்ப்பு தொடர்பாக ஜாமியத் உலாமா இ-ஹிந்த் அமைப்பு சீராய்வு மனுதாக்கல் - மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும் கோரிக்கை
Dec 2 2019 6:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கில், கடந்த 9-ம் தேதி வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது. அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டவும், இந்து அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு, வேறு இடத்தில், 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், அயோத்தி வழக்கில், கடந்த 9-ம் தேதி வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, ஜாமியத் உலாமா இ-ஹிந்த் அமைப்பு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 217 பக்கங்கள் கொண்ட மனுவில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அயோத்தி நில உரிமை கோரி முதன்முதலில் வழக்கு தொடர்ந்திருந்த மவுலானா சயத் அஷாத் ரஷீதி சார்பாகவே தற்போது மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.