40 ஆயிரம் கோடி நிதியை சிவசேனா கூட்டணிக்‍கு விட்டுச்செல்லக்‍கூடாது என்பதற்காகவே முதலமைச்சராக பதவியேற்றதாக வெளியான தகவல் - தேவேந்திர பட்னவிஸ் திட்டவட்ட மறுப்பு

Dec 2 2019 6:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரும்பான்மை இல்லாதபோதும், 40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றுவதற்காகவே, அவசரகதியில், தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பதவியேற்றதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

மஹாராஷ்ட்ரா முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்த 40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்புவதற்காகவே, சட்டசபையில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் இல்லாதபோதும், பா.ஜ.க.வின் திரு. தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றதாக, அக்‍கட்சியின் எம்.பி. திரு. அனந்த் குமார் ஹெக்‍டே தெரிவித்திருந்தார்.

கர்நாடகாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஹெக்‍டே, மஹாராஷ்ட்ரா அரசுக்‍கு மத்திய அரசு அளித்திருந்த 40 ஆயிரம் கோடி நிதியை, அடுத்து ஆட்சிக்‍கு வரும் சிவசேனா கூட்டணிக்‍கு விட்டுச்செல்லக்‍ கூடாது என்பதற்காகவே, இந்த நாடகம் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஹெக்‍டேவின் கருத்து முற்றிலும் தவறானது என தேவேந்திர பட்னவிஸ் விளக்‍கமளித்துள்ளார். தங்களிடம் மத்திய அரசு, எந்த நிதியையும் திருப்பி அனுப்புமாறு கேட்கவில்லை என்றும், தாங்கள் எதையும் திருப்பி அனுப்பவில்லை என்றும் பட்னவிஸ் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00