தெலங்கானா பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம் : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி நாடு முழுவதும் போராட்டம்

Dec 2 2019 8:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத்தில் இரு நாட்களுக்கு முன்பு கால்நடை பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, ராஜஸ்தானில் 6 வயது சிறுமி, ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென, மகளிர் அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு 6 மாதத்திற்குள் தண்டனை வழங்க வேண்டுமென, மத்திய அரசை வலியுறுத்தி, நாளை காலை 10 மணி முதல் கால வரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி. ஜெயா பச்சன், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாவிட்டால், குற்றவாளிகளை மக்களிடமே அளியுங்கள் என தெரிவித்தார். அவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மிமி சக்ரபோர்டி, பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00