குடியுரிமை சட்டத்திருத்த ம‍சோ‌தாவில் உரிய திருத்தங்களை செய்யாவிட்டால், மாநிலங்களவையில் ஆதரவளிக்க மாட்டோம் - மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உறுதி

Dec 10 2019 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்டத்திருத்த ம‍சோ‌தாவில் உரிய திருத்தங்களை செய்யாவிட்டால், மாநிலங்களவையில் ஆதரவளிக்க மாட்டோம் என்று மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, பெரும்பான்‌மை எம்.பி.,க்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு, காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த நி‌‌லையில், அக்கட்சியின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா கட்சி ஆதரவாக வாக்களித்தது. இதனால், சிவசேனா மீது காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்த, சிவசேனா கட்சியின் தலைவரும், மஹாராஷ்டிர மாநில முதலமைச்சருமான, திரு. உத்தவ் தாக்கரே, குடியுரிமை சட்டத்திருத்த ம‍சோதாவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளாவிடில், மாநிலங்களவையில் ஆதரவளிக்க மாட்டோம் என்றும், மசோதா மீது நாட்டு மக்களுக்கு சந்தேகம் இருந்தால், அதை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மாநிலங்களவையில், சிவசேனா கட்சிக்கு, 3 எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00