கைலாச நாட்டிற்கு குடியுரிமை கேட்டு 12 லட்சம் பேர் விண்ணப்பம் செய்ததாக நித்தி தகவல் - தனது உரையை ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பார்ப்பதாகவும் கூறுகிறார்

Dec 11 2019 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
நித்தியானந்தாவின் கைலாசா நாடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் கிடைக்‍காத நிலையில், கைலாசா நாட்டின் குடியுரிமை கேட்டு ஏராளமான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் குவிவதாகவும், 12 லட்சம் பேர் இதுவரை பதிவு செய்துள்ளதாகவும், சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். நித்தியானந்தா மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தியாவில் வழக்‍கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஈக்வடார் நாட்டுக்கு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதை கைலாசா என்ற தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் நித்தியானந்தா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தனது முகநூல் பக்கம் மூலம், நித்தியானந்தா, சீடர்களிடம் நேரலையில் பேசினார்.

அப்போது, கைலாசா தனி நாட்டை வரவேற்று லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளதாகவும், இதுவரை, 12 லட்சம் பேர் தங்களை இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். கைலாசா தனிநாடு அமைக்க உலக நாடுகளை சேர்ந்த பலர் தனக்கு நிலம் தர முன்வந்துள்ளதாகவும், விரைவில் தனி நாட்டுக்கு இடம் அமையும் என்றும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00