மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் - பாரதியாரின் எண்ணங்களும், பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டுவதாக நெகிழ்ச்சி

Dec 11 2019 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாகவி பாரதியாரின் 139வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். மகாகவி என அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்வதாக குறிப்பிட்டுள்ளார். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார் எனவும் புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் மோடி, பாரதியாரின் எண்ணங்களும், பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன என குறிப்பிட்டுள்ளார். சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை எல்லாவற்றுக்கும் மேலாக நம்பியதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துரைத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00