ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவம் - ஆதாரங்கள் தொடர்பான ஆவணங்களை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம், வழங்கியது தெலங்கானா காவல்துறை

Dec 11 2019 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹைதராபாத் என்கவுண்டர் தொடர்பான ஆதாரங்களை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம், தெலங்கானா போலீசார் வழங்கினர்.

ஹைதராபாத் பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்‍கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் 4 பேரும், கடந்த வாரம் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. ஹைதராபாத் வந்துள்ள மனித உரிமைகள் ஆணையத்தின் குழு, என்கவுண்டர் தொடர்பாகவும், அப்போது காயமடைந்த 2 போலீஸாரிடமும் விசாரணை நடத்தியது. விசாரணையில், குற்றவாளிகளின் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்காகவே தாங்கள் அவர்களை சுட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், வழக்கு தொடர்பாக தாங்கள் இதுவரை சேகரித்த ஆதாரங்களை, மனித உரிமைகள் ஆணைய குழுவிடம் போலீஸார் சமர்ப்பித்தனர். உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்‍கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தங்களது விசாரணை அறிக்கையையும், போலீஸார் வழங்கிய ஆதாரங்களையும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்‍க உள்ளது. இதனிடையே, குற்றவாளிகள் கொல்லப்பட்டாலும், மகளை இழந்த துக்‍கத்தில் இருந்து மீளமுடியவில்லை என, பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00