அயோத்தி தீர்ப்பின் மறு சீராய்வு மனுக்‍களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் - 18 சீராய்வு மனுக்‍களை ஏற்க மறுப்பு

Dec 12 2019 7:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரேதசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என்றும், அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் கடந்த நவம்பர் 9-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மசூதி கட்ட இஸ்லாமிய அமைப்புகளுக்கு அயோத்தியிலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மவுலானா முப்தி ஹஸ்புல்லா, மவுலானா மக்புசூர் ரஹ்மான், முகமது உமர் உள்ளிட்ட 6 பேர் தனித்தனியாக சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் சில இஸ்லாமிய அமைப்புகளும் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தன. ஆதரங்கள் அடிப்படையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் நம்பிக்கை அடிபடையில் தீர்பு வழங்கப்பட்டது தவறு என்றும் மனுதார்கள் ஏற்கெனவே பேட்டி அளித்திருந்தனர்.

அயோத்தியில் இஸ்லாமியர்கள் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்குவதை எதிர்த்து, அகில பாரத இந்து மகா சபை சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்துக்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மொத்தம் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சீராய்வு மனுக்கள் அனைத்தும், நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00