டெல்லியில் இந்தியா - தென்கொரியா இடையே 7 முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

Jul 10 2018 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா, தென்கொரியா இடையே அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட முக்‍கிய துறைகளில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அரசு முறைப் பயணமாக நேற்று முன் தினம் இந்தியா வந்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நேற்று நொய்டாவில் 32 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய மொபைல் ஃபோன் தொழிற்சாலையின் புதிய அலகை பிரதமர் திரு. மோடியும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இந்நிலையில், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்‍கு, இன்று குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோர் அவரை வரவேற்றனர்.

பின்னர் மூன் ஜே இன், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து, பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இரு நாடுகள் இடையே, அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட முக்‍கிய துறைகளில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00