சென்னை புறநகர் மின்சார வழித்தடத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய ஊழியர்கள் தீவிரம் - பிற்பகலுக்‍குப் பிறகே நிலைமை சீரடையும் என தகவல்

Feb 25 2021 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை புறநகர் மின்சார ரயில் வழித்தடத்தில் மின் துண்டிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், தாம்பரம் சானிடோரியம் இடையே மின் வயர் அறுந்து விழுந்து மின் துண்டிப்பு ஏற்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மின்துண்டிப்பால் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே பாதி வழிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், தற்போது, தாம்பரம் - கடற்கரை செல்லும் அனைத்து ரயில்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், குறைந்த எண்ணிக்கையிலேயே புறநகர் ரயில்கள் இயக்கப்படுவதால், தாம்பரம் குரோம்பேட்டை ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்ததால் புறநகர் மின்சார ரயில்களை பொதுமக்கள் நம்பியிருந்த நிலையில், சென்னையில் புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். நிலைமை சரியாக 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகுமென, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00