மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்‍கும் கர்நாடகாவுக்‍கு கண்டனம் - அம்மா மக்‍கள் முன்னேற்றக் ‍கழகம் சார்பில், ஆகஸ்ட் 6-ம் தேதி தஞ்சையில் டிடிவி தினகரன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Jul 25 2021 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்‍கும் கர்நாடகாவைக்‍ கண்டித்தும், மத்திய-மாநில அரசுகள் அதனைத் தடுத்து நிறுத்தக்‍கோரியும், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில், ஆகஸ்ட் 6-ம் தேதி, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் தஞ்சையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டின் ஜீவாதாரமாக விளங்கும் காவிரி நதிநீரில், நமக்‍குரிய பங்கினைத் தராமல், பல்வேறு காலகட்டங்களில் கர்நாடகா வஞ்சித்து வருவதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதிலும், தீய சக்‍தியான தி.மு.க. எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்‍கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் புதிய அணைகள் கட்டுவதை வழக்‍கமாக வைத்திருக்‍கும் கர்நாடகா, இப்போதும் மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதனைக்‍ கண்டித்தும், மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள், உரிய நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தியும், காவிரி பிரச்னையில் உறுதியாக நின்று, சட்டப்படியான தீர்ப்புகளை நமக்‍குப் பெற்றுத்தந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தின் சார்பில், வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதி, வெள்ளிக்‍கிழமையன்று காலை 11 மணி அளவில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்க இருப்பதாகவும், தலைமைக்‍கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் உரிமையைக்‍ காத்திட நடைபெறும் இப்போராட்டத்தில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைச் சரியாக கடைபிடித்து, மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, வட்டக்‍கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்‍கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்‍கொண்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00