வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பண்ணையில் ஒரே பதிவெண் கொண்ட இரு வாகனங்களை இயக்கி பால் திருடப்பட்ட விவகாரம் : 2 வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில் விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகம் நோட்டீஸ்
Jun 8 2023 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் சத்துவாச்சேரி ஆவின் பால் பண்ணையில் ஒரே பதிவெண் கொண்ட இரு வாகனங்களில் பால் பாக்கெட்டுகள் எடுத்துச் செல்ல முயன்றதைத் தொடர்ந்து, அங்கு தீவிர சோதனைக்கு பிறகே பால் வாகனங்கள் அனுமதிக்கின்றன. வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகள் வினியோகிக்கும் ஒப்பந்த வாகனங்களில், ஒரே பதிவெண்ணில் இரு வாகனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆவின் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், முகவர்களுக்கு வழங்குவதற்காக பால் பாக்கெட்டுகளை ஏற்ற ஆவின் பால் பண்ணைக்கு வரும் ஒப்பந்த வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.