சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்‍கு - விசாரணையை, 10 நாட்களுக்‍குள் முடிக்‍க உச்சநீதிமன்றம் உத்தரவு

Jan 28 2020 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்‍கு விசாரணையை, 10 நாட்களுக்‍குள் முடிக்‍க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ.பாப்டே உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்‍கலாம் என கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, சுமார் 50 மனுக்‍கள் உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்டன. மனுக்‍களை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, வழக்‍கை, 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்‍கு, கடந்த நவம்பர் மாதம் மாற்றியது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன்பு, இவ்வழக்‍கு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலைக்குள் சட்டப்படி பெண்களை அனுமதிக்க இயலுமா என்பது குறித்து மட்டுமே விசாரிக்‍க உள்ளதாக நீதிபதிகள் கூறினர். இவ்வழக்‍கில் ஆஜராகவுள்ள வழக்‍கறிஞர்கள், உச்சநீதிமன்ற பதிவாளருடன் ஆலோசனை நடத்தி, விசாரணையில், எவ்விதமான விவாதங்களை வைக்‍க வேண்டும் என்று முடிவு எடுக்‍க உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கடந்த 17-ம் தேதி உச்சநீதிமன்ற பதிவாளருடன், ஆலோசனை நடத்தியதாகவும், ஆனால், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்றும், அரசு தலைமை நீதிபதி திரு. துஷர் மேத்தா, இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்‍கு விசாரணையை, 10 நாட்களுக்‍குள் நிறைவு செய்ய, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அமர்வுக்‍கு தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ.பாப்டே இன்று உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00