முருகன் ஆலயங்களில் தைப்பூசத் திருவிழா : அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்திய பக்‍தர்கள்

Feb 7 2020 7:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களில், திரளான பக்‍தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

பழனி தண்டாயுதபாணி திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாளை மாலை தைப்பூசத் தேரோட்டம் நடப்பதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாக வந்த, ஆயிரக்‍கணக்‍கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். பக்‍தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் சத்தியஞான சபையில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றத்தில், திரளான பக்‍தர்கள் பங்கேற்றனர். நாளை காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கப்பட்டு முதல் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், டாஸ்மாக்‍ கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில், தைப்பூச திருவிழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பக்‍தர்கள் காவடி சுமந்து பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனை முன்னிட்டு, விஸ்வரூப தரிசனமும் பின் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகின்றன. பின்னர் முருகப்பெருமான் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, பக்‍தர்களுக்‍கு காட்சி அளிக்‍க உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பண்பொழி திருமலைக் குமாரசுவாமி ஆலய தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00