முருகப்பெருமானை போற்றி வழிபடும் தைப்பூச விழா வழிபாடுகள் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Feb 8 2020 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
தைப்பூசத் திருநாள் இன்று விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில், அதிகாலை முதலே பக்தர்கள் குடும்பத்துடன் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

முருகக் கடவுளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில், தைப்பூசத் திருநாளாம் இன்று, விஸவரூப தரிசனமும் பின்னர் உதய மார்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி தங்கமயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளி, திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக பக்‍தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள், காவடி சுமந்தும், அலகு குத்தியும், ஆடிப்பாடியும் முருகப்பெருமானை வழிபாடு நடத்தி வருகின்றனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள், மூன்றாம் படை வீடான திண்டுக்‍கல் மாவட்டம் பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இங்கு நடைபெறும் தேரோட்டத்தை காண, பக்தர்கள் சாரை சாரையாக பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். கிரிவீதி முழுவதும் அவர்கள், கூட்டமாக அமர்ந்து பக்‍தி பாடல்களைப் பாடினர். காவடி சுமந்து, ஆடிப் பாடி பக்‍தர்கள் உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.

திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான, திருச்சி வயலூரில் தைப்பூச விழா, சிறப்பாக நடைபெற்றது. அறுபடைவீடுகளில் சென்று வழிபட இயலாத பக்தர்கள், இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தால், அறுபடை பெருமானை தரிசனம் செய்த பாக்கியம் கிட்டும் என்பதால், ஏராமான பக்‍தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்கு, வள்ளி தெய்வானை சமேதராக முத்துக்குமாரசுவாமி வெள்ளி அங்கியுடன், எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு காட்சி அளிக்‍கிறார்.

சென்னை வடபழனியில் உள்ள பழனி ஆண்டவர் திருக்கோயிலில், அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்த பக்‍தர்கள், தங்கள் நேர்த்தி கடன் செலுத்தி, முருகப்பெருமானை வழிபட்டனர்.

ராமலிங்க அடிகளார் நிறுவிய வடலூர் சத்ய ஞான சபையில் தைப்பூச விழாவையொட்டி சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஜோதி தரிசனத்தை பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கண்டு வழிபட்டனர். மரணமில்லா பெருவாழ்வை போதித்த ராமலிங்க அடிகளார், பசிப் பிணியை போக்‍க அணையா அடுப்பினை வடலூர் சத்ய ஞான சபையில் ஏற்றி வைத்தார். அன்று முதல் இன்று வரை அங்கு வருவோருக்‍கு பசிப் பிணியை போக்‍க உணவு அளிக்‍கப்படுகிறது. சத்ய ஞான சபையில் 149-வது தைப்பூச ஜோதி ​தரிசன விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. ஏழு திரைகள் நீக்‍கி, ஆறு காலங்கள் காட்டப்படும் ஜோதி தரிசனத்தை காண பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் வடலூரில் குவிந்தனர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில், தைப்பூச திருவிழாவையொட்டி தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு காட்சி அளித்தார். வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்‍குகளால் அலங்கரிக்‍கப்பட்ட தெப்பத்தில், அம்மன் எழுந்தருளியதை பக்‍தர்கள் தரிசித்தனர்.

இதேபோல் நீர் ஸ்தலமான, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயத்தில் நடைபெற்ற, தெப்போற்சவ வைபவத்தில், திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டனர். அங்குள்ள ராம தீர்த்த குளத்தில், அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேசுவரர், பிள்ளையார், வள்ளி தெய்வாணையுடன் உள்ள சுப்ரமணியன், சண்டிகேசுவரர் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காகவும், தேரோட்டத்தைக் காணவும் குவிந்து வருகின்றனர். பழனி முழுவதும், காணுமிடமெல்லாம் காவடி ஏந்திய பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சிவகங்கை மாவட்டம் குன்றகுடி சண்முகநாதர் ஆலயத்தில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்‍கு அருள் பாலித்தார். பக்‍தர்கள், அரோகரா கோஷம் எழுப்பி திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலமான திருவாரூர் மாவட்டம், எண்கண் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில், தைப்பூச தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. பக்‍தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுக்‍க, 4 வீதிகளிலும் தேர் வலம் வந்தது.

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில், தைப்பூசத்தையொட்டி விஸ்வரூப தரிசனமும், பின்னர் உதய மார்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. பக்‍தர்கள், காவடி சுமந்தும் அலகு குத்தியும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

திருச்சி வயலூர் முருகப்பெருமானை தரிசிப்பதற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். வள்ளி தெய்வானை சமேதராக முத்துக்குமாரசுவாமி வெள்ளி அங்கியுடன், எழுந்தருளியுள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்ய ஞான சபையில், தைப்பூசமான இன்று, ஜோதி தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது. வடலூர் நகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில், லட்சக்‍கணக்‍கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், அங்கு பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா ஆலயத்தில், தை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், குமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளாவில் இருந்து வருகை தந்த ஏராளமானோர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு, இன்று அங்கு உள்ளூர் விடுமுறை அளிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00