தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் - நான்கு இரத வீதிகளில் உலா வந்த தேர்

Feb 8 2020 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசப் பெருவிழா கடந்த 2-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு இரத வீதி உலா எழுந்தருளினார். இதனை தொடர்ந்து, அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத முத்துக் குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னர் மங்கலநாணுக்கு பூஜைகள் நடைபெற்றன. பின் மேளதாளம் முழங்க வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத, ஓதுவார்கள் திருமுறைப்பாடல்கள் பாட நடைபெற்ற மங்கலநாண் அணிவித்தல் நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்குமாரசாமி, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித்தேரில் ஏற்றம் செய்யப்பட்டு, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேர், நான்கு இரத வீதிகளிலும் உலா வந்தது. சுவாமியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து, அரோகரா கோஷம் எழுப்பினர். முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம், இன்று மாலை, தேரடியில் நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00