முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Feb 9 2020 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு முருகன் கோவில்களில் நடைபெற்ற தேர் பவனி, தெப்பத் திருவிழா உள்ளிட்ட சிறப்பு வழிபாட்டில், திரளான பக்‍தர்கள் பங்‍கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, சுவாமி அலைவாய் உகாந்த பெருமான், தைபூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி தங்கமயில் சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், பிரசித்திப் பெற்ற தெப்பத் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுவாமியும் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தேரில் எழுந்தருளி, பக்‍தர்களுக்‍கு அருள்பாலித்தனர். தெப்ப தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும், அம்மனையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உபகோவிலான, வடக்குராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமிக்கு தைப்பூசத்தையொட்டி, உற்சவமூர்த்தி ஸ்ரீமுருகப்பெருமான் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மயில்வாகனத்தில் எழுந்தருளி, ஆலயத்தின் 4 ராஜவீதிகளில் வீதிஉலா காட்சி வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயத்தில், தைப்பூசத்தையொட்டி, சிங்காரவேலவருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்திற்கு பின் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து, முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன், திருநடனமாடி வீதியுலா வந்தார். தொடர்ந்து தெப்போற்சவம் நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00