தமிழகத்தின் பல்வேறு முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Feb 9 2020 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு முருகன் கோவில்களில் நடைபெற்ற தேர் பவனி, தெப்பத் திருவிழா உள்ளிட்ட சிறப்பு வழிபாட்டில், திரளான பக்‍தர்கள் பங்‍கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் முதற்படையான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தைப்பூசத் திருவிழாவையொட்டி, சுப்பிரமணிய சுவாமி தெய்வானை மற்றும் முத்துக்குமாரசாமி தெய்வானை என, இரண்டு சப்பரத்தில் கிரிவலத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையின் வழியாக சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. பின்னர், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சுவாமி காட்சியளித்தார். இதனையடுத்து பக்தர்கள் தெப்பத்தை வடம் பிடித்து இழுத்தனர். தெப்பத் திருவிழாவை காண ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வந்திருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி, இரண்டு திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, ஆயிரத்து எட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். பின்னர் முருகப் பெருமானுக்‍கு பால் அபிஷேக செய்யப்பட்டு, வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், உற்சவர் பாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அலங்கார கோலத்தில் அமர்ந்து அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00