தைப்பூச திருவிழா - பக்தர்கள் வழிபாடு : ரங்கநாதரிடம் மாரியம்மன் சீர்வரிசை பெற்றுக்கொள்ளும் வைபவம்

Feb 9 2020 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
தைப்பூச திருவிழாவையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம், சமயபுரம் மாரியம்மன் சீர்வரிசை பெற்றுக்‍கொள்ளும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடமிருந்து, தங்கை சமயபுரம் மாரியம்மன் சீர்வரிசை பெறும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. பட்டுப்புடவை, வளையல்கள், மலர்கள், பழங்கள், சந்தனம், மஞ்சள், கரும்பு, தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அடங்கிய தாம்பூலங்களை மாரியம்மன் பெற்றுக்‍கொண்டதை அடுத்து, மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் திரு.அசோக்குமார், ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர்கள் குழுத் தலைவர் திரு.வேணுசீனிவாசன், ஸ்ரீங்கம் அரங்கநாதர் கோயில் இணை ஆணையர் திரு.ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி வயலூர் சோமரசம்பேட்டை சந்திப்பில், கற்குடி மாமலையராக விளங்கும் உஜ்ஜீவநாதர் சுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருநாளையொட்டி சிறப்புப்பூஜை நடைபெற்றது. தனது பிள்ளையாக விளங்கும் வயலூர் முருகன், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன், அல்லித்துறை பார்வதீஸ்வரர், பொம்மசமுத்திரம் காசிவிஸ்வநாதர் மற்றும் உறையூர் சீனிவாசப்பெருமாள் ஆகிய ஐந்து ஊர்களைச் சேர்ந்த தெய்வங்களும், தங்களது தந்தையையும் பிற தெய்வங்களையும் கண்டு வணங்கி செல்லும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்‍தர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00