சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்‍கு - 9 நீதிபதிகள் அமர்வுக்‍கு மாற்றப்பட்டது சரியே என உச்சநீதிமன்றம் உத்தரவு

Feb 10 2020 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்‍கு, 9 நீதிபதிகள் அமர்வுக்‍கு மாற்றப்பட்டது சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்‍கலாம் என கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, 50-க்‍கும் மேற்பட்ட மனுக்‍கள் உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்டன. மனுக்‍களை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, வழக்‍கை, 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்‍கு, கடந்த நவம்பர் மாதம் மாற்றியது.

இதையடுத்து, சபரிமலை மட்டுமன்றி, அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும், பெண்களின் அனுமதி குறித்து விசாரிக்‍கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு அறிவித்தது.

இதனிடையே, சபரிமலை வழக்‍கு, 9 நீதிபதிகள் அமர்வுக்‍கு மாற்றப்பட்டது சரியா என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை கடந்த 6-ம் தேதி நிறைவுபெற்றது. இவ்வழக்‍கில் இன்று உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டது. அப்போது, வழக்‍கு, 9 ​நீதிபதிகள் அமர்வுக்‍கு மாற்றப்பட்டது சரியே என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு கூறியது. மேலும், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும், பெண்களை அனுமதிப்பது குறித்து விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00