தைப்பூசத் திருவிழாவின் 9-ம் நாள் : தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு - தெப்பத்தேர் உலா

Feb 11 2020 10:10AM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழாவின் 9-ம் நாளை முன்னிட்டு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. நிறைவுநாள் நிகழ்ச்சியாக இன்று தெப்பத்தேர் உலா நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதி உலா எழுந்தருளினார். திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டம், தைப்பூசத் திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன. இந்நிலையில், விழாவின் 9ம் நாள் நிகழ்ச்சியாக பெரிய தங்கமயில் வாகனத்தில் சுவாமி ரதவீதி உலா எழுந்தருளினார்.

துறையூர் மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று தெப்பத்தேர் உலா நடைபெறுகிறது. இதையொட்டி, பெரியநாயகியம்மன் கோயில் அருகே தெப்பத்தில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. தெப்பத்தேர் உலாவைத் தொடர்ந்து இரவு திருக்கொடி இறக்கம் நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00