சித்திரை மாத பூஜை, விஷூகனி பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Apr 13 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா அச்சுறுத்தலுக்‍கு இடையே, சித்திரை மாத பூஜை மற்றும் விஷூகனி பூஜைக்‍காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்‍கப்படுகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழா ரத்து செய்யப்பட்டது. சித்திரை மாத பூஜை பக்தர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சித்திரை மாத பூஜை மற்றும் விஷூகனி பூஜைக்‍காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்‍கப்படுகிறது. வரும் 18-ம் தேதிவரை, உஷபூஜை, உச்சபூஜை, அத்தாழபூஜை ஆகியவை மட்டும் நடைபெறும் என்றும், நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, சகஸ்ரகலசம், புஷ்பாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பூஜைகளுக்காக நடை திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி இரவு 7:30 மணிக்கு பூஜைகள் நிறைவுபெற்று நடை அடைக்கப்படவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00